கலிபோர்னியா - கடும் குளிர் மற்றும் பனிப்புயல் காரணமாக 16 பேர் பலி

January 11, 2023

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடுமையான குளிர்கால புயல் வீசி வருகிறது. இது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் என்பதால், சேதங்கள் அதிகமாக உணரப்பட்டுள்ளது. இதுவரை, புயல் காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை விட கூடுதலாகும். கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் கவின் நியூசோம், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், குளிர்கால புயல் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு […]

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடுமையான குளிர்கால புயல் வீசி வருகிறது. இது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் என்பதால், சேதங்கள் அதிகமாக உணரப்பட்டுள்ளது. இதுவரை, புயல் காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை விட கூடுதலாகும்.

கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் கவின் நியூசோம், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், குளிர்கால புயல் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், அரசாங்க அதிகாரிகள் அவசரக்கால ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் கனமழையுடன் குளிர்காலப் புயல் வீசி வருவதால், வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்று வருகின்றனர். மேலும், பேரிடர் பாதிக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விரைவில் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu