பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் - அறிவிப்பு

February 7, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவியை மூன்று ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெற்றோர்களின் போராட்டத்தினால் குற்றவாளிகள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் சீண்டல் செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழக அரசு பாலியல் குற்றங்களை தடுக்க […]

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவியை மூன்று ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெற்றோர்களின் போராட்டத்தினால் குற்றவாளிகள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் சீண்டல் செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழக அரசு பாலியல் குற்றங்களை தடுக்க புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. குற்றம் செய்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மட்டுமல்ல, அவர்களின் கல்விச் சான்றுகளும் ரத்து செய்யப்படும்" என தெரிவித்தார். காவல்துறையுடன் இணைந்து, பள்ளிக்கல்வித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu