திருச்சியில் இன்று முதல் 3 நாட்களுக்கு நிழல் இல்லா நாள்

ஒவ்வொரு ஆண்டும் 2 அல்லது 3 நாட்களுக்கு மட்டுமே சூரியன் மிகச்சரியாக நமது பகுதிக்கு நேர் உச்சியில் இருக்கும். குறிப்பிட்ட அந்த நாட்களில் நமது நிழல் பூமியில் விழாது. அத்தகைய நாள் நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் என்று அழைக்கப்படுகிறது. திருச்சியில் இன்று முதல் 3 நாட்களுக்கு நிழல் இல்லா நாள் ஏற்படுகிறது. திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு நிழல் இல்லா நாள் அமைகிறது. ஒவ்வொரு நாளும் […]

ஒவ்வொரு ஆண்டும் 2 அல்லது 3 நாட்களுக்கு மட்டுமே சூரியன் மிகச்சரியாக நமது பகுதிக்கு நேர் உச்சியில் இருக்கும். குறிப்பிட்ட அந்த நாட்களில் நமது நிழல் பூமியில் விழாது. அத்தகைய நாள் நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் என்று அழைக்கப்படுகிறது. திருச்சியில் இன்று முதல் 3 நாட்களுக்கு நிழல் இல்லா நாள் ஏற்படுகிறது.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு நிழல் இல்லா நாள் அமைகிறது. ஒவ்வொரு நாளும் நண்பகலில் ஓரிரு நிமிடங்களுக்கு இந்த நிகழ்வு ஏற்படும். இன்று, திருச்சி, வையம்பட்டி, மணப்பாறை, மணிகண்டம், திருவெறும்பூர் பகுதிகளில் நிழல் இல்லா நாள் உணரப்பட்டது. நாளை, லால்குடி, ஸ்ரீரங்கம், முசிறி போன்ற பகுதிகளிலும், நாளை மறுநாள் துறையூரிலும், நிழல் இல்லா நாள் ஏற்படும் என திருச்சி மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu