பிரம்மாண்டமாக தொடங்க உள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடரின் துவக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்ள உள்ளார்.
இந்தியாவில் நாளை மாலை 6.30 மணிக்கு இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியானது பெங்களூரில் உள்ள எம். ஏ சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்வது தற்போது உறுதியாகி உள்ளது. மேலும் சாஹித் கபூர், கார்த்திக் ஆரியன், வருண் தவான், டைகர் ஷெராப் உள்ளிட்ட பல பிரபலங்களும் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதி போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் விளையாட உள்ளன. இந்த மகளிர் லீக் தொடரானது நாளை தொடங்கி மார்ச் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.














