பிரபல தொழிலதிபர் மறைந்த ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பரான சாந்தனு நாயுடுவுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் Strategic Initiatives பிரிவுக்கான பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சாந்தனு நாயுடுவே இதை உறுதிப்படுத்தி, தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். "என் அப்பா டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். வாழ்க்கை ஒரு வட்டம்," என்று கூறியுள்ளார்.
2014ஆம் ஆண்டு, தெருநாய்கள் பாதுகாப்புக்காக திட்டம் அமைத்த சாந்தனு, ரத்தன் டாடாவின் கவனத்தை ஈர்த்தார். இருவரும் செல்லப்பிராணிகள் மீதான அன்பின் மூலம் நெருக்கமான நண்பர்களாக ஆனார்கள். 2018ல், ரத்தன் டாடாவின் உதவியாளராக பணியாற்றிய அவர், டாடா சன்ஸில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டார். "I Came Upon a Lighthouse" புத்தகத்தில் இருவரின் நட்பு பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.














