ரஷ்யாவுக்கு சீனா ஆயுத விநியோகம் - இங்கிலாந்து எச்சரிக்கை

May 24, 2024

ரஷ்யாவுக்கு சீனா அபாயகரமான ஆயுதங்களை விநியோகம் செய்வதாக இங்கிலாந்து குற்றம் சுமத்தியுள்ளது. ரஷ்யா சமீப காலமாக உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு முன்னேற்றமும் கண்டு வருகிறது. இந்த சூழலில் சீனா ரஷ்யாவுக்கு அபாயகரமான போர் கருவிகளை விநியோகம் செய்வதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் கிராண்ட் ஷாப் கூறுகையில், ரஷ்யாவுக்கு சீனா அபாயகரமான கருவிகளை விநியோகம் செய்து வருவதாக எங்களுக்கு உளவுத் துறை தகவல் கிடைத்துள்ளது. […]

ரஷ்யாவுக்கு சீனா அபாயகரமான ஆயுதங்களை விநியோகம் செய்வதாக இங்கிலாந்து குற்றம் சுமத்தியுள்ளது.

ரஷ்யா சமீப காலமாக உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு முன்னேற்றமும் கண்டு வருகிறது. இந்த சூழலில் சீனா ரஷ்யாவுக்கு அபாயகரமான போர் கருவிகளை விநியோகம் செய்வதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் கிராண்ட் ஷாப் கூறுகையில், ரஷ்யாவுக்கு சீனா அபாயகரமான கருவிகளை விநியோகம் செய்து வருவதாக எங்களுக்கு உளவுத் துறை தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கான உதவிகளை அதிகரிக்க வேண்டும் என்றார். முன்னதாக ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்களை தயாரிப்பதற்கான தேவைப்படும் முக்கிய பொருட்களை வினியோகம் செய்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் ரஷ்யாவுக்கு நேரடியாக ஆயுதங்களை சீனா அளிப்பதாக குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இங்கிலாந்தின் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. இது குறித்து லண்டனில் உள்ள சீன தூதரக செய்தி தொடர்பாளர் பேசுகையில், இந்த குற்றச்சாட்டு அடிப்படை முகாந்திரம் இல்லாதது. சீனா மீது பொய்யான குற்றச்சாட்டை இங்கிலாந்து பரப்புகிறது என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu