தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக சரத்பவார் தொடர வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் திடீரென அறிவித்தார். இனிமேல் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் கூறினார். தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்ய 15 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி உயர்நிலைக் குழுக் கூட்டம் கூடிய நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக சரத்பவார் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
சரத்பவார் தனது ராஜினாமாவை திரும்பப்பெற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி குழு பரிந்துரை செய்துள்ளது. சரத்பவார் ராஜினாமாவை ஏற்க இயலாது என கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக சரத்பவார் தொடர வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.