நேற்றைய தினத்தில் சரிந்து காணப்பட்ட பங்குச்சந்தை, இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 303.91 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 68.25 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், சென்செக்ஸ் 69825.6 ஆகவும், நிஃப்டி 20969.4 ஆகவும் உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், ஹெச் சி எல் டெக், எல்டிஐ மைண்ட் ட்ரீ, இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், அப்பல்லோ ஹாஸ்பிடல், டைட்டன், என்டிபிசி, பாரத ஸ்டேட் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், அதானி எண்டர்பிரைசஸ், ஐடிசி, அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஓஎன்ஜிசி, பிரிட்டானியா, மஹிந்திரா, டாடா ஸ்டீல், பவர் கிரிட், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.