இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 241.86 புள்ளிகள் உயர்ந்து 71106.96 ஆக உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 94.36 புள்ளிகள் உயர்ந்து 21349.4 ஆக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், விப்ரோ, ஹெச் சி எல் டெக், ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், கோல் இந்தியா, மாருதி சுசுகி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பாரத ஸ்டேட் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி லைஃப் போன்றவை சரிவை சந்தித்துள்ளன. மொத்தத்தில், உற்பத்தி, எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் வாகன பிரிவுகளில் ஏற்றமும், வங்கி துறையில் சரிவும் காணப்பட்டுள்ளது.