பங்குச் சந்தையில் நீடிக்கும் சரிவு போக்கு

October 19, 2023

பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு போக்கு நீடித்து வருகிறது. இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 247.78 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 46.4 புள்ளிகளையும் இழந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 65629.24 புள்ளிகளிலும், நிஃப்டி 19624.7 புள்ளிகளிலும் நிறைவு பெற்றுள்ளன.இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் ஆட்டோ, எல் டி ஐ மைண்ட் ட்ரீ, நெஸ்லே இந்தியா, ஹீரோ மோட்டோகார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், இண்டஸ் இண்ட் வங்கி, […]

பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு போக்கு நீடித்து வருகிறது. இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 247.78 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 46.4 புள்ளிகளையும் இழந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 65629.24 புள்ளிகளிலும், நிஃப்டி 19624.7 புள்ளிகளிலும் நிறைவு பெற்றுள்ளன.இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் ஆட்டோ, எல் டி ஐ மைண்ட் ட்ரீ, நெஸ்லே இந்தியா, ஹீரோ மோட்டோகார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், இண்டஸ் இண்ட் வங்கி, சிப்லா ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், விப்ரோ, டெக் மஹிந்திரா, யு பி எல், ஹிண்டால்கோ, சன் பார்மா, என் டி பி சி, ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, டாடா ஸ்டீல், பவர் கிரிட், பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், பஜாஜ் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu