இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு நிலை நீடிக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 231.62 புள்ளிகள் சரிந்து, 65397.62 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 82.05 புள்ளிகள் சரிந்து 19542.65 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, கோட்டக் வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, டிசிஎஸ், எஸ்பிஐ லைஃப், என்டிபிசி, நெஸ்லே, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஐடிசி, டாடா ஸ்டீல், டேவிஸ் லேப், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பிபிசிஎல், சிப்லா, ஹிண்டால்கோ, ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, பவர் கிரிட் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.