தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தின் போது, 430 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்தது. இறுதியில், 364.06 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 65995.63 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 19653.5 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளன.
பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், டைட்டன், இண்டஸ் இன்ட் வங்கி, டிசிஎஸ், ரிலையன்ஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி, பவர் கிரிட், டாடா ஸ்டீல், என்டிபிசி, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், எஸ் பி ஐ போன்ற அனேக நிறுவனங்கள் இன்று ஏற்றம் பெற்றன. அதே சமயத்தில், ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.