இஸ்ரேல் பாலஸ்தீன போர் காரணமாக இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி

October 9, 2023

இஸ்ரேல் பாலஸ்தீன போர் உலக அளவில் வர்த்தக ரீதியான பாதிப்புகளை இன்று ஏற்படுத்தியுள்ளது. இந்திய பங்குச் சந்தையிலும் இது எதிரொலித்தது. இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 483.24 புள்ளிகளை இழந்துள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 141.16 புள்ளிகளை இழந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 65512.39 ஆகவும் நிஃப்டி 19512.35 ஆகவும் உள்ளன. இன்றைய வர்த்தகத்தில், டாக்டர் ரெட்டீஸ், எச் சி எல் டெக், […]

இஸ்ரேல் பாலஸ்தீன போர் உலக அளவில் வர்த்தக ரீதியான பாதிப்புகளை இன்று ஏற்படுத்தியுள்ளது. இந்திய பங்குச் சந்தையிலும் இது எதிரொலித்தது. இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 483.24 புள்ளிகளை இழந்துள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 141.16 புள்ளிகளை இழந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 65512.39 ஆகவும் நிஃப்டி 19512.35 ஆகவும் உள்ளன.
இன்றைய வர்த்தகத்தில், டாக்டர் ரெட்டீஸ், எச் சி எல் டெக், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஓஎன்ஜிசி, டாடா கன்சியூமர் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஹெச் டி எஃப் சி லைப், மஹிந்திரா, பிபிசிஎல், ஹெச் டி எஃப் சி வங்கி, ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, டாடா ஸ்டீல், எஸ் பி ஐ போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu