இந்திய பங்குச் சந்தையில் நேற்று உயர்வு காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 237.72 புள்ளிகள் சரிந்து, 63874.93 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 61.31 புள்ளிகள் சரிந்து, 19079.6 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.இன்றைய வர்த்தகத்தில், மஹிந்திரா, சன் பார்மா, ஈச்சர் மோட்டார்ஸ், எல் டி ஐ மைண்ட் ட்ரீ, ஓஎன்ஜிசி, ஏர்டெல், ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், ஐடிசி, ஓஎன்ஜிசி ஆகிய முக்கிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. அதே சமயத்தில், எஸ்பிஐ லைஃப், டைட்டன், ஹெச்டிஎஃப்சி லைப், கோட்டக் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச் சி எல் டெக், டாடா கன்சியூமர், டாடா மோட்டார்ஸ், பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன.