பங்குச் சந்தை ஏற்றத்திற்கு முடிவு - சென்செக்ஸ் 90 புள்ளிகள் சரிவு

July 5, 2023

கடந்த 5 அமர்வுகளாக இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவாகி வந்தது. இந்த ஏற்றம் இன்று நிறைவு பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நேரத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 90 புள்ளிகள் வரை சரிந்தது. ஆனால், வர்த்தக நேர முடிவில் சற்று ஏற்றம் பெற்று 33.01 புள்ளிகளை இழந்துள்ளது. இறுதியாக, இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 65446.04 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 9.5 […]

கடந்த 5 அமர்வுகளாக இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவாகி வந்தது. இந்த ஏற்றம் இன்று நிறைவு பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நேரத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 90 புள்ளிகள் வரை சரிந்தது. ஆனால், வர்த்தக நேர முடிவில் சற்று ஏற்றம் பெற்று 33.01 புள்ளிகளை இழந்துள்ளது. இறுதியாக, இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 65446.04 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 9.5 புள்ளிகள் உயர்ந்து 19398.5 புள்ளிகளாக உள்ளது. எனவே, இன்றைய வர்த்தகத்தில், பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் இன்றி நிறைவு பெற்றதாக கருதப்படுகிறது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், டேவிட் லேப்ஸ், ரிலையன்ஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி, மாருதி சுசுகி, டெக் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி லைஃப், பி பி சி எல், இண்டஸ் இண்ட் வங்கி போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே வேளையில், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்தால்கோ, பஜாஜ் பின்சர்வ், ஈச்சர் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் இறக்கமடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu