இந்திய பங்குச் சந்தையில் இன்று ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கம் முதலே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டு எண்கள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 489.57 புள்ளிகள் உயர்ந்து, 64080.9 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 144.1 புள்ளிகள் உயர்ந்து 19133.25 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, பிரிட்டானியா, ஹிண்டால்கோ, இண்டஸ் இண்ட் வங்கி, அப்பல்லோ ஹாஸ்பிடல், ஈச்சர் மோட்டார்ஸ், யுபிஎல், எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஹீரோ மோட்டோகார்ப், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், ஓஎன்ஜிசி, டாக்டர் ரெட்டிஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப் போன்ற நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.