பங்குச்சந்தையில் நீடிக்கும் சரிவு போக்கு - சென்செக்ஸ் 286 புள்ளிகள் வீழ்ச்சி

October 4, 2023

இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு போக்கு நீடித்து வருகிறது. இன்றைய வர்த்தக நாளின் இடையில், 500 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது. ஆனால், சற்று மீண்டு எழுந்து, இறுதியில் 286.06 புள்ளிகளை இழந்து நிலை பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் குறியீட்டு எண் 65226.04 புள்ளிகளிலும், நிஃப்டி 19436.1 புள்ளிகளிலும் நிலைபெற்று உள்ளன. தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, அதானி எண்டர்பிரைசஸ், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஈச்சர் மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை ஏற்றம் […]

இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு போக்கு நீடித்து வருகிறது. இன்றைய வர்த்தக நாளின் இடையில், 500 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது. ஆனால், சற்று மீண்டு எழுந்து, இறுதியில் 286.06 புள்ளிகளை இழந்து நிலை பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் குறியீட்டு எண் 65226.04 புள்ளிகளிலும், நிஃப்டி 19436.1 புள்ளிகளிலும் நிலைபெற்று உள்ளன.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, அதானி எண்டர்பிரைசஸ், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஈச்சர் மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே வேளையில், ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, என்டிபிசி, டாடா ஸ்டீல், பவர் கிரிட், ரிலையன்ஸ், எல் அண்ட் டி, கோட்டக் வங்கி ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu