இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் பதிவாகி வருகிறது. இன்றைய வர்த்தக நாளின் இடையில், 1000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ், இறுதியில் 655 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை 73651.35 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை 22326.9 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் பின்சர்வ், கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் பைனான்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, பவர் கிரிட், டாடா ஸ்டீல், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, என்டிபிசி, இன்ஃபோசிஸ், டிசிஎஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், டெக் மஹிந்திரா, பிரிட்டானியா, எச் சி எல் டெக், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.














