இந்திய பங்குச் சந்தையில், தொடர்ந்து ஏற்றம் பதிவாகி வருகிறது. கடந்த வாரம் ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை, இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்றும் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 240.98 புள்ளிகள் உயர்ந்து 65628.14 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 93.5 புள்ளிகள் உயர்ந்து, 19528.8 புள்ளிகளாக உள்ளது.
தனிப்பட்ட முறையில், கோல் இந்தியா, விப்ரோ, ஹெச் சி எல் டெக், அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி, டாக்டர் ரெட்டீஸ், எல்டிஐ மைண்ட் ட்ரீ, டாடா ஸ்டீல், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே வேளையில், மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே, ஐ டி சி, பஜாஜ் பைனான்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.