தொடர்ந்து 2வது நாளாக மாற்றமின்றி தொடரும் பங்குச்சந்தை

September 26, 2023

தொடர்ந்து இரண்டு நாட்களாக இந்திய பங்குச் சந்தையில் பெரிய அளவிலான மாற்றங்கள் பதிவாகவில்லை. இன்றைய தினம், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 78.22 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 9.25 புள்ளிகளும் சரிவடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை 65945.47 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை 19664.7 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளது. நேற்றைய தினம் போலவே, ஏற்ற இறக்கப் பாதையில் வர்த்தகம் பதிவானது. தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, […]

தொடர்ந்து இரண்டு நாட்களாக இந்திய பங்குச் சந்தையில் பெரிய அளவிலான மாற்றங்கள் பதிவாகவில்லை. இன்றைய தினம், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 78.22 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 9.25 புள்ளிகளும் சரிவடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை 65945.47 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை 19664.7 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளது. நேற்றைய தினம் போலவே, ஏற்ற இறக்கப் பாதையில் வர்த்தகம் பதிவானது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, ஈச்சர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், நெஸ்லே, பஜாஜ் ஆட்டோ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, என்டிபிசி, எஸ் பி ஐ போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், இண்டஸ் இண்ட் வங்கி, சிப்லா, டெக் மஹிந்திரா, கோட்டக் வங்கி, கோல் இந்தியா, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu