பங்குச்சந்தையில் ஏற்றம் - சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு

November 28, 2023

மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது. இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 204.16 புள்ளிகள் உயர்ந்து 66174.2 புள்ளிகளாக நிறைவு அடைந்துள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 95 புள்ளிகள் உயர்ந்து 19889.7 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. இன்றைய வர்த்தகத்தில், அதானி குழுமம் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது. அதானி குழுமத்தை சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் நிறுவனங்கள் அதிக லாபம் […]

மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது. இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 204.16 புள்ளிகள் உயர்ந்து 66174.2 புள்ளிகளாக நிறைவு அடைந்துள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 95 புள்ளிகள் உயர்ந்து 19889.7 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், அதானி குழுமம் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது. அதானி குழுமத்தை சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன. மேலும், டாடா மோட்டார்ஸ், பிபிசிஎல், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், இன்டஸ் இன்ட் வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், அப்போலோ ஹாஸ்பிடல், ஐடிசி, ஈச்சர் மோட்டார்ஸ், சிப்லா, சன் பார்மா, எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பவர் கிரிட் ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu