இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1240.9 புள்ளிகள் உயர்ந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 385 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், சென்செக்ஸ் 71941.57 ஆகவும், நிஃப்டி 21737.6 ஆகவும் உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், கோல் இந்தியா, அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், பிபிசிஎல், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா ஸ்டீல், பவர் கிரிட், என் டி பி சி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அநேக நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே சமயத்தில், சிப்லா, ஐடிசி, எல் டி ஐ மைன்ட்ரி, இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ, டெக் மஹிந்திரா, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.