இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை இறக்கத்துடன் தொடங்கி இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 115.81 புள்ளிகள் சரிந்து 66166.93 புள்ளிகள் ஆக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 19.3 புள்ளிகள் சரிவடைந்து 19731.75 புள்ளிகளாக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், ஹீரோ மோட்டோகார்ப், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், எல்டிஐ மைண்ட் ட்ரீ, கோல் இந்தியா, ஹெச் சி எல் டெக், பவர் கிரிட், ஓஎன்ஜிசி, இன்ஃபோசிஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை ஏற்றமடைந்துள்ளன. ஆனால், நெஸ்லே இந்தியா, டேவிஸ் லேப்ஸ், டிசிஎஸ், இன்டஸ் இன்ட் வங்கி, அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை இறக்கமடைந்துள்ளன.