இந்திய பங்குச்சந்தை, இன்று ஏற்றத்தில் தொடங்கி ஏற்றத்தில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இடையில் சற்று சரிவை சந்தித்தாலும், மீண்டும் தொடக்க நேர வர்த்தகப் புள்ளிகளை எட்டியது. இறுதியாக, இன்றைய வர்த்தக நாளின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 261.16 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 79.75 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. அதன்படி, நிறைவாக, சென்செக்ஸ் 66428.09 புள்ளிகளாகவும், நிஃப்டி 19811.5 புள்ளிகள் ஆகவும் உள்ளன.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, பிபிசிஎல், பவர் கிரிட், எஸ்பிஐ லைஃப், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, கோல் இந்தியா, டாடா ஸ்டீல், கோட்டக் வங்கி, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, இன்டஸ் இன்ட் வங்கி, டிசிஎஸ், டேவிஸ் லேப்ஸ், ஓ என் ஜி சி, யுபிஎல் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.














