இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்றத்தில் தொடங்கி இறுதியாக சரிந்தது. எனினும், 0.3% ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 77578.38 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 23518.5 புள்ளிகளில் நிறைவு அடைந்துள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், டிசிஎஸ், ஐடிசி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, மஹிந்திரா, ஜொமாட்டோ போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், அதானி பவர், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், அதானி கிரீன், வோடபோன், ஐ சி ஐ சி ஐ வங்கி போன்றவை சரிவடைந்துள்ளது.