மீண்டெழுந்த பங்குச்சந்தை - சென்செக்ஸ் 567 புள்ளிகள் உயர்வு

October 10, 2023

இஸ்ரேல் பாலஸ்தீன போர் காரணமாக, நேற்று ஒரே நாளில் 4 லட்சம் கோடி பங்குச்சந்தை மூலதனத்தை முதலீட்டாளர்கள் இழக்க நேரிட்டது. ஆனால், இன்று, பங்குச்சந்தை கடும் சரிவிலிருந்து மீண்டு, மிகப்பெரிய ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 566.97 புள்ளிகள் உயர்ந்து, 66079.36 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 177.5 புள்ளிகள் உயர்ந்து, 19689.85 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. […]

இஸ்ரேல் பாலஸ்தீன போர் காரணமாக, நேற்று ஒரே நாளில் 4 லட்சம் கோடி பங்குச்சந்தை மூலதனத்தை முதலீட்டாளர்கள் இழக்க நேரிட்டது. ஆனால், இன்று, பங்குச்சந்தை கடும் சரிவிலிருந்து மீண்டு, மிகப்பெரிய ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 566.97 புள்ளிகள் உயர்ந்து, 66079.36 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 177.5 புள்ளிகள் உயர்ந்து, 19689.85 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
சர்வதேச சந்தைகள் நேற்று பெரும் சரிவை சந்தித்த நிலையில், இன்று ஏற்றம் பெற்றுள்ளன. அந்த வகையில், இந்திய பங்குச் சந்தையும் ஏற்றமடைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்று, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், ஏர்டெல், ஹிண்டால்கோ, ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ், இன்போசிஸ், ஹெச் டி எப் சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, டாடா ஸ்டீல், எஸ் பி ஐ, ஓ என் ஜி சி, என் டி பி சி போன்ற அனேக நிறுவனங்கள் ஏற்றம் பெற்றன. ஆனால், இண்டஸ் இண்ட் வங்கி, சிப்லா, டிசிஎஸ், டாக்டர் ரெட்டீஸ் போன்ற குறிப்பிட்ட சில நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu