இந்திய பங்குச் சந்தையில் எழுச்சி - சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு

May 26, 2023

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கி, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. தொடக்கம் முதலே ஏற்றம் கண்ட மும்பை பங்கு சந்தை, தொடர்ந்து எழுச்சி பெற்று, இன்றைய வர்த்தக நேர முடிவில் 62501.69 புள்ளிகள் ஆக நிலை கொண்டது. சென்செக்ஸ் குறியீட்டு எண் ஒரே நாளில் 629.07 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண், ஒரே நாளில் 178.2 புள்ளிகள் உயர்ந்து, 18499.35 புள்ளிகளில் […]

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கி, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. தொடக்கம் முதலே ஏற்றம் கண்ட மும்பை பங்கு சந்தை, தொடர்ந்து எழுச்சி பெற்று, இன்றைய வர்த்தக நேர முடிவில் 62501.69 புள்ளிகள் ஆக நிலை கொண்டது. சென்செக்ஸ் குறியீட்டு எண் ஒரே நாளில் 629.07 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண், ஒரே நாளில் 178.2 புள்ளிகள் உயர்ந்து, 18499.35 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, பவர் கிரிட், பார்தி ஏர்டெல், என்டிபிசி ஆகியவை இன்று இறக்கமடைந்துள்ளன. மற்றபடி, ரிலையன்ஸ், சன் ஃபார்மா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹெச் சி எல் டெக், டெக் மஹிந்திரா, விப்ரோ, டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயிண்ட்ஸ், மஹிந்திரா, நெஸ்ட்லே, எல் அண்ட் டி, இண்டஸ் இண்ட் வங்கி, ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், மாருதி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றத்தில் நிறைவடைந்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 2.79% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu