பங்குச் சந்தையில் நீடிக்கும் சரிவு

October 7, 2024

இந்திய பங்குச் சந்தையில் சரிவு நீடித்து வருகிறது. கடந்த ஐந்து அமர்வுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிகளை சென்செக்ஸ் இழந்துள்ளது. முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் 638.45 புள்ளிகளும் நிஃப்டி 218.85 புள்ளிகளும் இழந்துள்ளது. இறுதியாக, மும்பை பங்குச்சந்தை 81050 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை 24795.75 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், அதானி பவர், எஸ் […]

இந்திய பங்குச் சந்தையில் சரிவு நீடித்து வருகிறது. கடந்த ஐந்து அமர்வுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிகளை சென்செக்ஸ் இழந்துள்ளது. முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் 638.45 புள்ளிகளும் நிஃப்டி 218.85 புள்ளிகளும் இழந்துள்ளது. இறுதியாக, மும்பை பங்குச்சந்தை 81050 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை 24795.75 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், அதானி பவர், எஸ் வங்கி, ஜொமாட்டோ, சுஸ்லான் எனர்ஜி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஐடிசி, இன்ஃபோசிஸ், டிசிஎஸ் போன்ற சில நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu