ஐடி பங்குகள் சரிவு எதிரொலி - சென்செக்ஸ் 610 புள்ளிகள் வீழ்ச்சி

September 28, 2023

இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. குறிப்பாக, ஐடி நிறுவன பங்குகள் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. மேலும், எஃப் எம் சி ஜி மற்றும் வங்கித் துறைகளிலும் வீழ்ச்சி காணப்பட்டது. இதன் எதிரொலியாக, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 610.37 புள்ளிகளை இழந்துள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 192.91 புள்ளிகளை இழந்துள்ளது. இறுதியாக, சென்செக்ஸ் 65508.32 புள்ளிகளிலும், நிஃப்டி 19523.55 புள்ளிகளிலும் நிலை கொண்டுள்ளன.எல் அன்ட் […]

இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. குறிப்பாக, ஐடி நிறுவன பங்குகள் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. மேலும், எஃப் எம் சி ஜி மற்றும் வங்கித் துறைகளிலும் வீழ்ச்சி காணப்பட்டது. இதன் எதிரொலியாக, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 610.37 புள்ளிகளை இழந்துள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 192.91 புள்ளிகளை இழந்துள்ளது. இறுதியாக, சென்செக்ஸ் 65508.32 புள்ளிகளிலும், நிஃப்டி 19523.55 புள்ளிகளிலும் நிலை கொண்டுள்ளன.எல் அன்ட் டி, பவர் கிரிட், ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, எஸ் பி ஐ ஆகிய நிறுவனங்கள் இன்று ஏற்றம் பெற்றுள்ளன. ஆனால், டெக் மஹிந்திரா, எல்டிஐ மைண்ட்ட்ரீ, ஏசியன் பெயிண்ட்ஸ், டேவிஸ் லேப்ஸ், என்டிபிசி, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ரிலையன்ஸ், கோட்டக் வங்கி, ஐடிசி, மஹிந்திரா, விப்ரோ, இன்போசிஸ், மாருதி சுசுகி, அல்ட்ராடெக் சிமெண்ட், டிசிஎஸ், நெஸ்லே, சன் பார்மா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்ற அனேக நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu