இந்திய பங்குச் சந்தையில் இன்று ஏற்றம் பதிவாகியுள்ளது. குறிப்பாக, வங்கி துறை சார்ந்த பங்குகள் உயர்ந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 349.24 புள்ளிகள் உயர்ந்து, 73057.4 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 74.71 புள்ளிகள் உயர்ந்து 22196.95 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. இது புதிய உச்சம் ஆகும்.
இன்றைய வர்த்தகத்தில், எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோட்டக் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பவர் கிரிட், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி லைஃப், அப்போலோ ஹாஸ்பிடல் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, ஈச்சர் மோட்டார்ஸ், கோல் இந்தியா, டி சி எஸ், சிப்லா, பஜாஜ் பின்சர்வ், டாடா ஸ்டீல், ஐடிசி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.