ஏற்ற இறக்கப் பாதையில் பங்குச் சந்தை

September 27, 2023

இன்றைய வர்த்தக நாளில் பங்குச்சந்தை ஏற்ற இறக்க பாதையில் பயணித்துள்ளது. கிட்டத்தட்ட 350 புள்ளிகள் வரை இழந்த சென்செக்ஸ் இறுதியில் மீண்டெழுந்து நேர்மறையாக முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 173.22 புள்ளிகள் உயர்ந்து 66118.69 புள்ளிகளாக உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 51.75 புள்ளிகள் உயர்ந்து 19716.45 புள்ளிகளாக உள்ளது. தொடர் சரிவுகளுக்குப் பிறகு இன்று பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்துள்ளது […]

இன்றைய வர்த்தக நாளில் பங்குச்சந்தை ஏற்ற இறக்க பாதையில் பயணித்துள்ளது. கிட்டத்தட்ட 350 புள்ளிகள் வரை இழந்த சென்செக்ஸ் இறுதியில் மீண்டெழுந்து நேர்மறையாக முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 173.22 புள்ளிகள் உயர்ந்து 66118.69 புள்ளிகளாக உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 51.75 புள்ளிகள் உயர்ந்து 19716.45 புள்ளிகளாக உள்ளது. தொடர் சரிவுகளுக்குப் பிறகு இன்று பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இன்றைய வர்த்தகத்தில், எல் அண்ட் டி, கோல் இந்தியா, ஐடிசி, சிப்லா, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. ஆனால், டைட்டன், ஹீரோ மோட்டோகார்ப், எஸ் பி ஐ, ஹெச் டி எப் சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, டாடா ஸ்டீல், என் டி பி சி, பஜாஜ் பைனான்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu