இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 240.36 புள்ளிகள் உயர்ந்து, 62787.47 புள்ளிகளில் நிலை கொண்டது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 59.75 புள்ளிகள் உயர்ந்து, 18593.85 புள்ளிகளில் பதிவாகியுள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, மஹிந்திரா நிறுவனம் 4% உயர்வுடன் முன்னணியில் உள்ளது. மேலும், ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், எஸ் பி ஐ லைப், அசோக் லேலண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஏற்றத்தை சந்தித்துள்ளன. அதே வேளையில், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.