தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை - சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயர்வு

September 8, 2023

கடந்த ஒரு வாரமாக, இந்திய பங்குச் சந்தையில் தொடர் ஏற்றம் பதிவாகி வருகிறது. அதன்படி, இன்றைய வர்த்தக நாளின் போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 333.35 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 92.91 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நாளின் முடிவில், மும்பை பங்குச்சந்தை 66598.91 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை 19819.95 புள்ளிகளிலும் நிறைவு பெற்றுள்ளன. இன்றைய வர்த்தகத்தில், கோல் இந்தியா லிமிடெட், […]

கடந்த ஒரு வாரமாக, இந்திய பங்குச் சந்தையில் தொடர் ஏற்றம் பதிவாகி வருகிறது. அதன்படி, இன்றைய வர்த்தக நாளின் போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 333.35 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 92.91 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நாளின் முடிவில், மும்பை பங்குச்சந்தை 66598.91 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை 19819.95 புள்ளிகளிலும் நிறைவு பெற்றுள்ளன.

இன்றைய வர்த்தகத்தில், கோல் இந்தியா லிமிடெட், என் டி பி சி, பி பி சி எல், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, எஸ் பி ஐ போன்றவை ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், ஈச்சர் மோட்டார்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல், யூ பி எல், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், நெஸ்லே, டாக்டர் ரெட்டீஸ், எல்டிஐ மைண்ட் ட்ரீ போன்ற நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu