ஷேர்சாட் இணை நிறுவனர்கள் ஃபரீத் ஹசன் மற்றும் பானு பிரதாப் சிங் பதவி விலகல்

January 26, 2023

ஷேர்சாட் சமூக வலைத்தளத்தின் இணை நிறுவனர்களான ஃபரித் ஹசன் மற்றும் பானு பிரதாப் சிங் ஆகியோர் தங்கள் பதவியில் இருந்து விலகுவதாக தலைமை செயல் அதிகாரி அங்குஷ் சச்தேவா தெரிவித்துள்ளார். எனினும், அவர்கள் இருவரும் தொடர்ந்து நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்று, ஆலோசனைகள் வழங்கி வருவர் என தெரிவித்துள்ளார். முன்னதாக, நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி அஜித் வர்கீஸ், வர்த்தகப் பிரிவு தலைவர் கிஷோர் ஆச்சார்யா ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. ஷேர்சாட் […]

ஷேர்சாட் சமூக வலைத்தளத்தின் இணை நிறுவனர்களான ஃபரித் ஹசன் மற்றும் பானு பிரதாப் சிங் ஆகியோர் தங்கள் பதவியில் இருந்து விலகுவதாக தலைமை செயல் அதிகாரி அங்குஷ் சச்தேவா தெரிவித்துள்ளார். எனினும், அவர்கள் இருவரும் தொடர்ந்து நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்று, ஆலோசனைகள் வழங்கி வருவர் என தெரிவித்துள்ளார். முன்னதாக, நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி அஜித் வர்கீஸ், வர்த்தகப் பிரிவு தலைவர் கிஷோர் ஆச்சார்யா ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ஷேர்சாட் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக ஹசன் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக சிங் ஆகியோர் பதவி வகித்து வந்தனர். இந்நிலையில், தற்போது, கௌரவ் பாட்டியா தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், மனோகர் சிங் சரண் தலைமை இயக்க அதிகாரியாகவும் பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஏற்கனவே நிறுவனத்தின் உயர் பதவிகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சச்தேவா, ஹசன், சிங் ஆகிய மூவரும் ஷேர்சாட்டின் தாய் நிறுவனமான முஹல்லா டெக் நிறுவனத்தில் தலா 4.2% பங்குகள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu