இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் ஏற்றம் பதிவாகியுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 727.71 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 206.9 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 66901.91 ஆகவும், நிஃப்டி 20096.6 ஆகவும் உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், மஹிந்திரா, விப்ரோ, எல்டிஐ மைண்ட்ரி, டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, ஐடிசி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ் ஆகிய முக்கிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், அதானி எண்டர்பிரைசஸ், ஓஎன்ஜிசி, நெஸ்லே, அதானி போர்ட்ஸ், டேவிஸ் லேப்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ் ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.