இந்திய அரசால் இயக்கப்பட்டு வரும் புத்தாக்க எரிசக்தி நிறுவனம் IREDA (Indian Renewable Energy Development Agency) ஆகும். அண்மையில், இந்த நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. அதை தொடர்ந்து, இன்று வெளியான நிறுவனத்தின் பங்குகள் 56.3% உயர்வுடன் அறிமுகமாகியுள்ளன.
IREDA நிறுவன பங்குகள் இன்று முதல் முறையாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 134.39 பில்லியன் ரூபாய் ஆக உள்ளது. மேலும், நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 50 ரூபாய் மதிப்பில் வெளியானது. அதே வேளையில், IREDA நிறுவனத்தின் ஐபிஓ பங்கு விலை 32 ரூபாயாக இருந்தது. எனவே, அறிமுக நாளிலேயே 56.3% உயர்வுடன் IREDA பங்குச்சந்தையில் வெளிவந்துள்ளது.