பெண் தொழில் முனைவோருக்கான தகவல் மையமாக SheAtWork என்ற தளம் இயங்கி வருகிறது. இந்த தளத்தின் தோற்றுனரான ரூபி சின்ஹா, BRICS CCI பெண்கள் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு, இவர் பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக மற்றும் தொழில்துறை பிரிவின் பெண்கள் பிரிவு தலைவராக இருப்பார் என சொல்லப்பட்டுள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் பொது நிர்வாகி டாக்டர் பி பி எல் மதுக்கர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், ரூபி சின்ஹாவின் தலைமையின் கீழ், பிரிக்ஸ் அமைப்பின் பெண்கள் பிரிவு புதிய உயரங்களை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் வர்த்தக மற்றும் தொழில்துறை மேம்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், BRICS CCI அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளுள் ஒன்றாகும். இதன் மூலம், பெண் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் பல்வேறு நாடுகளில் விரிவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.