ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், 30 ஆண்டுகள் கழித்து நேற்று மொகரம் ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மொகரம் ஊர்வலம் நடத்துவதற்கு கடந்த 34 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தடை நீக்கப்பட்டுள்ளதால், நேற்று ஸ்ரீ நகரில் உள்ள குரு பஜார் பகுதியில் இருந்து டல்கேட் வரை மொகரம் ஊர்வலம் நடைபெற்றது. ஷியா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலத்துக்கு முறையான அனுமதி பெறப்பட்டு, அமைதியான முறையில் ஊர்வலம் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் ஆளுநர் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
மொகரம் ஊர்வலம் திட்டமிடப்பட்டதை அடுத்து, ஸ்ரீ நகரில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது.














