இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு 34 டெஸ்ட், 167 ஒருநாள், 68 டி20 போட்டிகளில் விளையாடியவர் ஆவார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான், உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடிய இவர், 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,315 ரன்களைப் பெற்றுள்ளார். 2010-ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமான ஷிகர் தவான், 2022ஆம் ஆண்டின் பிறகு அணியில் வாய்ப்பு பெறவில்லை.