இமாச்சலப் பிரதேசத்தில் வரலாறு காணாத மழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்.
சிம்லாவில் சம்மர்ஹில் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலசரிவு ஏற்பட்டு கோவில் இடிந்துள்ளது. இதில் ஒன்பது பக்தர்கள் இடற்படுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் பலர் கோவிலுக்குள் சிக்கி உள்ளனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முதல் மந்திரி சுகவீந்தர் சிங் நேரில் சென்று மீட்பு பணியை விரைவு படுத்தினார்.














