மெக்சிகோவில் கார் பந்தயத்தில் துப்பாக்கிச் சூடு - 10 வீரர்கள் பலி

May 22, 2023

மெக்சிகோவில் கார் பந்தயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 வீரர்கள் பலியாகியுள்ளனர். மெக்சிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டா நகரில் உள்ள சென் வென்சிட்டி பகுதியில் நேற்று கார் பந்தயம் நடைபெற்றது. இதில் 50க்கு மேற்பட்ட கார் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் கார் பந்தயத்தின் போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அப்போது வேனில் வந்த ஒரு கும்பல் கார் பந்தய வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கார் பந்தய […]

மெக்சிகோவில் கார் பந்தயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 வீரர்கள் பலியாகியுள்ளனர்.

மெக்சிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டா நகரில் உள்ள சென் வென்சிட்டி பகுதியில் நேற்று கார் பந்தயம் நடைபெற்றது. இதில் 50க்கு மேற்பட்ட கார் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் கார் பந்தயத்தின் போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அப்போது வேனில் வந்த ஒரு கும்பல் கார் பந்தய வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கார் பந்தய வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். மேலும் தப்பியோடிய கும்பலை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu