பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிர்ச்சி தரும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. சுமார் 69 வயது மதிக்கத்தக்க வெள்ளைக்கார நபர் ஒருவர், குர்திஷ் கலாச்சார மையத்தில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். அவர், இதற்கு முன்னதாக, ஏற்கனவே இரண்டு முறை குர்திஷ் இன மக்களை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. காவல்துறையினரும் அவரைப் பற்றிய இந்த தகவலை உறுதி செய்துள்ளனர். நேற்று நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 3 பேர் பலியானதாகவும் மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குர்திஷ் கலாச்சார மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.