தென்கிழக்கு பிரேசிலில், அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றும் தனியார் பள்ளி ஒன்றும் ஒரே தெருவில் அமைந்துள்ளன. வெள்ளிக்கிழமை அன்று, இங்கு வந்த முன்னாள் மாணவர் ஒருவர், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். புல்லட் ப்ரூப் ஆடை அணிந்து வந்த அவர், செமி ஆட்டோமேட்டிக் பிஸ்டலால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இரண்டு ஆசிரியர்களும் ஒரு மாணவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடந்த 4 மணி நேரத்திற்கு பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியது அரசு பள்ளியில் பயின்ற 16 வயது மாணவர் என்று தெரியவந்துள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அவர் கண்டறியப்பட்டுள்ளார். அவர் வைத்திருந்த துப்பாக்கி அவரது தந்தையுடையது என தெரியவந்துள்ளது. மேலும், காயமடைந்த 13 பேரில் 9 பேர் ஆசிரியர்கள் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பிரேசில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.














