டெல்டா மாவட்டங்களில் கர்நாடகா அரசை கண்டித்து கடைகள் அடைப்பு

October 11, 2023

தமிழகத்திற்கு திறந்து விடக் கூடிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட மறுத்து வருவதால் இதனை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர்,கடலூர் ஆகிய எட்டு டெல்டா மாவட்டங்களில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத காரணத்தை வலியுறுத்தி கர்நாடகா அரசை எதிர்த்து இன்று காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியாக்கம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். […]

தமிழகத்திற்கு திறந்து விடக் கூடிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட மறுத்து வருவதால் இதனை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர்,கடலூர் ஆகிய எட்டு டெல்டா மாவட்டங்களில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத காரணத்தை வலியுறுத்தி கர்நாடகா அரசை எதிர்த்து இன்று காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியாக்கம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து இன்று முழு கடை அடைப்பு போராட்டம் டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி,குடவாசல், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 30000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்க பட்டுள்ளன. மக்களுக்கு அத்தியாவசிய தேவையான பால்,மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 13-ஆம் தேதி மத்திய அரசு அலுவலகம் வந்து முற்றுகை போராட்டம் நடைபெற இருக்கிறது. இதே போல புதுக்கோட்டை, திருச்சி, ஆலங்குடி, கீரமங்கலம், அரியலூர், கடலூர் ஆகிய பகுதிகளிலும் கடை அடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 1 லட்சத்துக்கு மேலான கடைகள் இன்று அடைக்கப்பட்டு இருக்கின்றன. அசம்பாவித சம்பவங்கள் எதும் நடைபெறாமல் இருப்பதற்காக தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu