இந்தியாவைச் சேர்ந்த பிரபல வங்கி அல்லாத நிதி நிறுவனம் ஸ்ரீராம் பைனான்ஸ் ஆகும். இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 12.9% உயர்வை பதிவு செய்துள்ளது. அதன்படி, வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில், ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 2029.7 ரூபாய்க்கு வர்த்தகமானது.ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம், நேற்று தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபத்தில் 13% உயர்வு பதிவு செய்யப்பட்டு, 1792 கோடி லாபம் அறிவிக்கப்பட்டது. மேலும், நிறுவனத்துக்கு வட்டி மூலமாக கிடைத்த வருவாய் 18.8% உயர்ந்து, 4969.39 கோடி ரூபாயாக சொல்லப்பட்டது. நிதி நிறுவனத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 19.65% உயர்ந்து, 202640.96 கோடி அளவில் பதிவு செய்யப்பட்டது. இந்த முடிவுகள் வெளியான காரணத்தால், ஸ்ரீராம் பைனான்ஸ் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.