சித்தராமையா மீது மைசூரு நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான வழக்கில் மூடா தலைவர் மாரி கவுடா ராஜினாமா செய்தார்.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, மைசூரு நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான மோசடி வழக்கில் குற்றம் சாட்டபட்டுள்ளர். இதற்காக லோக்ஆயுக்தா விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், மூடா தலைவர் மாரி கவுடா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் 1983-ல் இருந்து சித்தராமையாவுடன் பணியாற்றிய நிலையில், உடல்நலக் காரணமாக ராஜினாமா செய்துள்ளார். எதிர்க்கட்சிகள், சித்தராமையா மனைவி பி.என். பார்வதியின் பெயரில் 14 மனைகளை ஒதுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர், ஆனால் சித்தராமையா இதனை மறுத்துள்ளார்.