சீமென்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 62% உயர்வு

சீமென்ஸ் நிறுவனத்தின் வரிக்குப் பின்னான நிகர லாபம் 61.9% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மார்ச் மாத இறுதியில் 516 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் வருவாய் 28.8% உயர்வை பதிவு செய்துள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2023-ம் நிதி ஆண்டின் இறுதியில், நிறுவனத்தின் வருவாய் 4401 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மட்டுமே, நிறுவனத்தின் […]

சீமென்ஸ் நிறுவனத்தின் வரிக்குப் பின்னான நிகர லாபம் 61.9% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மார்ச் மாத இறுதியில் 516 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் வருவாய் 28.8% உயர்வை பதிவு செய்துள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2023-ம் நிதி ஆண்டின் இறுதியில், நிறுவனத்தின் வருவாய் 4401 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மட்டுமே, நிறுவனத்தின் இயக்கம் மூலமாக கிடைத்துள்ள நிகர லாபம் 318.7 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த காலாண்டில், 31151 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஆர்டர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 8.1% உயர்வாகும். மேலும், நிறுவனத்தின் 9000 ஹெச்பி குதிரை திறன் கொண்ட லோகோமோடிவ் திட்டத்திற்கு 25455 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu