பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வரும் சீக்கிய பக்தர்களுக்கு இணையவழியில் இலவச விசா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் வந்த பிறகு 30 நிமிடங்களில் இந்த விசா வழங்கப்படும். லாகூரில் 44 வெளிநாட்டு சீக்கிய பயணிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
முன் காலங்களில் சீக்கிய பக்தர்களுக்கு விசா பெறுவதில் சிரமங்கள் இருந்ததாக கூறி, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். ஆண்டுக்கு 10 முறை பயணம் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் பாகிஸ்தானுக்கு வரும் 1 லட்சம் சீக்கிய பக்தர்களின் எண்ணிக்கையை 10 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.