சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் 102 பேரை காணவில்லை. இதில் 3000 சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.
சிக்கிம் மாநிலத்தில் வரலாறு காணாத மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .இது அங்குள்ள இரு கரைகளையும் உடைத்துக் கொண்டு வெள்ளம் சீறிப்பாய்ந்தது. இது பல மாவட்டங்களில் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டிருக்கின்றனர். இதில் 100 வாகனங்களில் வந்திருந்த வீரர்களும் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். மேலும் 23 ராணுவ வீரர்கள் கதி என்ன ஆனது என்பது குறித்து தெரியாமல் இருந்து வருகிறது. பல இடங்களில் 15க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். அவர்களது உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றன. மேலும் இங்கு தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காலம். இதில் 3000 கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும் சிக்கியுள்ளனர்.