சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனது

March 11, 2023

அமெரிக்காவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி, பெரிய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் வங்கியாக உள்ளது. இந்நிலையில், நேற்று இந்த வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த வங்கி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள், இந்த வங்கியை மூடி உள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இதுவே மிகப்பெரிய வங்கித் துறை தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிகாரிகள், சிலிக்கான் வேலி வங்கியிலிருந்த 175 பில்லியன் டாலர்கள் வாடிக்கையாளர்கள் பணத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் […]

அமெரிக்காவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி, பெரிய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் வங்கியாக உள்ளது. இந்நிலையில், நேற்று இந்த வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த வங்கி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள், இந்த வங்கியை மூடி உள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இதுவே மிகப்பெரிய வங்கித் துறை தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிகாரிகள், சிலிக்கான் வேலி வங்கியிலிருந்த 175 பில்லியன் டாலர்கள் வாடிக்கையாளர்கள் பணத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் வங்கியில் முதலீடு செய்தவர்கள் மற்றும் வைப்பு வைத்திருந்தவர்கள் மிகவும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த இரு தினங்களாக, வங்கியின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சிலிக்கான் வேலி வங்கி, அமெரிக்க பாண்டுகளில் அதிக முதலீடுகளை செய்திருந்தது. இந்நிலையில், பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த, பாண்டுகளின் மதிப்பு சரிந்தது. அதே வேளையில், கொரோனாவுக்கு பின்னர், அதிக எண்ணிக்கையில் வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுக்கத் தொடங்கினர். இதனால், வங்கியில் இருப்பு குறைந்து, திவால் ஆகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu